துபாயில் மாணவர்களின் கராத்தே சாம்ராஜ்யம்! 8 பதக்கங்கள்!ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று செயின்ட் ஜோசப் பள்ளி அசத்தல்!
துபாயில் நடைபெற்ற இந்தோ – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில், கோவை ஒண்டிப்புதூர் செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அசத்தல் சாதனை படைத்துள்ளனர்!
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில், பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று பள்ளிக்கும், கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
குறிப்பாக, போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதில், 6-ம் வகுப்பு மாணவர் சுவஸ்திக் கட்டா பிரிவில் தங்கமும், சண்டைப் பிரிவில் வெள்ளியும் வென்றுள்ளார்.
9-ம் வகுப்பு மாணவி தேவி பாரதி ஒற்றைக் கம்பு பிரிவில் தங்கப் பதக்கமும், பத்தாம் வகுப்பு மாணவி ஜோஷிஹா ஸ்ரீ கட்டா பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.
11-ம் வகுப்பு மாணவர் பிரதியுமன், கட்டா பிரிவில் இரண்டாம் பரிசும், குமித்தே பிரிவில் முதல் பரிசும் வென்று அசத்தியுள்ளார்.
3-ம் வகுப்பு மாணவி ஜசீனா தஸ்னீம் கட்டா பிரிவில் தங்கப் பதக்கமும், ஆறாம் வகுப்பு மாணவி மன்ஹா ஷிரீன் கட்டா பிரிவில் வெள்ளியும், சண்டைப் பிரிவில் தங்கமும் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் மாணவர்கள் மொத்தம் 4 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
சர்வதேச அளவில் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளியின் தாளாளர் கிருபாகரநாதன் பாராட்டி வாழ்த்தினார்.
மேலும், கராத்தே பயிற்சியாளர்கள் சிரில் வினோத், கோகுலகிருஷ்ணன், ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வெற்றியாளர்களைப் பாராட்டினர்.
துபாயில் கோவை மாணவர்களின் இந்த சர்வதேச சாதனை, பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், மேலும் பல வெற்றிகளுக்கான ஊக்கமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
1