தேர்வில் சாதனை!மேடையில் அசத்தல்! கேம்ப்ஃபோர்டு பள்ளியின் ‘டைனமிக்ஸ் 2026’ கோலாகலம்!”
கோவை கேம்ப்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியின் 17-வது நிறுவனர் தின விழாவான ‘டைனமிக்ஸ் 2026’, கல்விச் சாதனைகள் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், தலைமையாசிரியை பூனம் சியால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் ஏ. அருண், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் பாராட்டினார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் பொறுப்புணர்வுடன் மாணவர்கள் தங்களது இலட்சியங்களை அடைய வேண்டும் என்றும், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளம் தலைமுறையினரின் பங்கு முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
2025–2026 கல்வியாண்டின் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 12 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும், பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ராக் பேண்ட் இசை, யு.வி. நடனம், நிழல் நடனம், சமகால மற்றும் பாரம்பரிய நடனங்கள், வீதி நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
கல்கியின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட நடனங்கள், ஏகலைவன் கதையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்திய நையாண்டி நாடகம் ஆகியவை அனைவரின் பாராட்டுகளையும் பெற்றன.
வண்ணமயமான உடைகள், பிரம்மாண்டமான மேடை அலங்காரங்கள் மற்றும் மாணவர்களின் படைப்பாற்றல் நிறைந்த நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தன.
கல்விச் சிறப்புடன் மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ‘டைனமிக்ஸ் 2026’ விழா, அனைவரின் பாராட்டுகளுடன் இனிதே நிறைவடைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0