காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா
கோவை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நளை ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள காந்தியடிகள் மற்றும் காமராஜர் திரு உருவச்சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்திய தேசத் தந்தை அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 157 வது பிறந்தநாளை நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தமிழக முன்னாள் முதல்வர் கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 51 வது நினைவு நாளை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பாக காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் என் எம் ராஜேந்திரன் தலைமையில் நாடைபெற்ற இவ்விழாவில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி டி மோகன்ராஜ், டிசிசி உறுப்பினர் மோகன், நகர செயலாளர் பாலாஜி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி கலந்து கொண்டு கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள காந்தியடிகள் மற்றும் காமராஜர் சிலைகளுக்கு ஆளுயர மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ் சுரேஷ்குமார், அசோகபுரம் ரகுபதி, ராஜகோபால், எல் ஆர் டி சண்முகசுந்தரம், என் எம் வி சண்முகபிரியன், தேங்காய் சுப்ரமணியம், வரதராஜன், வெள்ளிங்கிரி, கூடலூர் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, ராக்கிப்பாளையம் சிவ மூர்த்தி, போட்டோ குமார், சண்முகசுந்தரம், ராமசாமி, செல்வகுமார், மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் பன்னீர்மடை பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும், மகாத்மா காந்தி படத்திக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ பாலசுப்பிரமணியம் தலைமையில், வட்டார நிர்வாகிகள் சூர்யா வெள்ளிங்கிரி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாளியூர் ராஜேந்திரன், கே சுந்தர்ராஜ், கார்த்திகேயன், கே காளியப்பன், சண்முகம், காளியப்பன், நாகராஜ், சாதிக் பாய், பாபு, வேல்முருகன், பொன்ராஜ், நடராஜன், வடிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0