25 ஆண்டுகள் கல்விச் சேவையில் வெள்ளி விழா! 8 புதிய நவீன மையங்கள் தொடக்கம் – சசூரி கல்விக் குழுமம் அசத்தல் சாதனை!

Nov 1, 2026 - 10:54
 0  27
25 ஆண்டுகள் கல்விச் சேவையில் வெள்ளி விழா! 8 புதிய நவீன மையங்கள் தொடக்கம் – சசூரி கல்விக் குழுமம் அசத்தல் சாதனை!
25 ஆண்டுகள் கல்விச் சேவையில் வெள்ளி விழா! 8 புதிய நவீன மையங்கள் தொடக்கம் – சசூரி கல்விக் குழுமம் அசத்தல் சாதனை!

திருப்பூர் மாவட்டம், விஜயமங்கலத்தில் உள்ள சசூரி கல்விக் குழுமத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா முப்பெரும் விழாவாகக் கோலாகலமாக நடைபெற்றது.

கல்விக் குழுமத்தின் தலைவர் ஏ.எம். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலாளர் சவிதா மோகன்ராஜ், செயல் இயக்குநர் டாக்டர் பி. நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், வெள்ளி விழா நினைவுச் சின்னம் மற்றும் மாணவர்களின் கல்வி, தொழில் திறன் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட 8 புதிய நவீன மையங்களைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கொங்கு மண்டலத்தில் மருத்துவம், விவசாயம், கல்வி, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து செயலாளர் சவிதா மோகன்ராஜ் கூறுகையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறை சார்ந்த திறன்களை உருவாக்கும் நோக்கில் 8 நவீன கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், தொழில்துறையினர், கல்வியாளர்கள், சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

25 ஆண்டுகால கல்விச் சேவையையும் சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற சசூரி கல்விக் குழுமத்தின் வெள்ளி விழா, கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்புகளுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0