ராயல் கேர் மருத்துவமனையில் நவீன ICU தொடக்கம்!”
கோவை: கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 14 படுக்கைகள் கொண்ட புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா, ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. புதிய பிரிவை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைக்கான ஆண்டு நிதி ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால், பலர் பயனடைந்து வருவதாகவும் கூறினார்.
விபத்து ஏற்பட்டால் முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்றும், இந்த காலகட்டத்தில் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அவசர உயர் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வருவதால், விபத்து உயிரிழப்புகள் குறைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் நிலையில், மருத்துவத் துறையிலும் உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பங்களை ராயல் கேர் மருத்துவமனை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவின் சிறப்பம்சங்கள் குறித்து டாக்டர் மாதேஸ்வரன் விளக்கினார். நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, உலகின் முன்னணி மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் ராயல் கேர் மருத்துவமனை தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் சிவக்குமார், 14 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரிவில் வழங்கப்பட உள்ள சிகிச்சைகள் மற்றும் நவீன மருத்துவக் கட்டமைப்புகள் குறித்து விளக்கினார்.
விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என். எம். சுகுமார், மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி, சி.ஓ.ஓ. மணி செந்தில்குமார், மருத்துவமனை மார்க்கெட்டிங் பிரிவு சீனியர் பொது மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0