நீலகிரி குன்னூர் – பர்லியார் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துத் தடை நீட்டிப்பு..!

Oct 27, 2026 - 12:45
 0  1

கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்க அனுமதி – இன்று முதல் சுற்றுலாத் தலங்கள் திறப்பு..!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த 24.10.2026 முதல் 26.10.2026 வரை மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள், இன்று (27.10.2026) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 23.10.2026 மற்றும் 24.10.2026 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன.

தற்போது, இன்று முதல் சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

மேலும், கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலை வழியாகப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், குன்னூர் – பர்லியார் – மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அந்த வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0