கவுண்டம்பாளையம் தொகுதிக்கு "ஜாக்பாட்"3.39 கோடியில் 7 திட்டங்கள்
கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ரூ.3.39 கோடியில் 7 முக்கிய சுகாதாரத் திட்டங்கள்!
14 மருத்துவ நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அறிவிப்பு – MLA கனிமொழி சந்தோஷ் நன்றி
கோயம்புத்தூர்:
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 2026–27ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.3.39 கோடி மதிப்பில் 7 முக்கிய சுகாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தொகுதிக்குட்பட்ட 14 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பெற உள்ளன.
விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமுதாய சுகாதார மையமாக தரம் உயர்த்தப்பட உள்ளது. துடியலூர் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றா நோய் சிகிச்சை மற்றும் உயர்சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், கவுண்டம்பாளையம் மற்றும் எஸ்.எஸ்.குளம் பகுதிகளில் 14 அடிப்படை இலவச உடல்நலப் பரிசோதனைகள், நாயக்கன்பாளையம் பழங்குடியின மக்களுக்கான நடமாடும் மருத்துவ சேவை, சர்க்கார்சாமக்குளம் பகுதியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவை உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த முக்கிய சுகாதாரத் திட்டங்களை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோருக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, தொகுதி மக்களுக்கு முழுமையான பயன்கள் கிடைக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0