ரோட்டரி யுனைட் வனம் திட்டம் தொடக்கம்!1லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
‘ரோட்டரி யுனைட் வனம்’ திட்டம் தொடக்கம் !
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு இலக்கு!
கோயம்புத்தூரின் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில், சிறுதுளி அமைப்பு மற்றும் பேரூர்–செட்டிபாளையம் ஊராட்சி இணைந்து, ரோட்டரி சங்கங்களின் ஆதரவுடன் ‘ரோட்டரி யுனைட் வனம்’ திட்டத்தைத் தொடங்கின. இதன் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேரூர்–செட்டிபாளையம் ஊராட்சியில், அருள்மிகு பால கணபதி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப. திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பெ. ரமேஷ், ரோட்டரி மாவட்டம் 3206 ஆளுநர் ஆர்.எஸ். மாருதி, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வெஸ்ட் தலைவர் வி. சந்திரசேகர், செயலாளர் முத்தழகப்பன், சமூக சேவைப் பிரிவுத் தலைவர் சி.கே. சசிகுமார், திட்டத் தலைவர் பி.பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், நிகழ்ச்சியில் வாழ்வாதார உதவி தேவைப்படும் குடும்பத்துக்கு மாவட்ட ஆட்சியர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். சிறுதுளி அமைப்பு இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, 500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைப் பசுமைப் பகுதிகளாக மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0