வயது வெறும் நம்பர்தான்! விளையாட்டில் அசத்தும் மூத்த வீரர்கள்!
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில், 5-வது தேசிய மூத்தோர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இலங்கையிலிருந்தும் ஏராளமான மூத்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், வீரர்கள் தங்களது விளையாட்டுத் திறமையையும் உடல் தகுதியையும் வெளிப்படுத்தினர்.
முதுமையிலும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன், விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபடுவதன் அவசியத்தை இப்போட்டிகள் எடுத்துரைத்தன. மேலும், இளைய தலைமுறையினரிடம் விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற ஊக்கமளிக்கவும் இந்நிகழ்வு அமைந்தது.
இளைய தலைமுறையினர் போதைப் பழக்கங்கள் மற்றும் ஊக்கமருந்துப் பயன்பாடு போன்றவற்றிலிருந்து விலகி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், விளையாட்டுத் துறையில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வீரர்கள் வலியுறுத்தினர்.
மூத்த வயதிலும் உற்சாகத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், உடல் ஆரோக்கியத்திற்கும் மன உறுதிக்கும் வயது தடையல்ல என்பதை எடுத்துக்காட்டினர். இவர்களின் பங்கேற்பு, அனைத்து வயதினரும் விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0