தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! தனிஷ்க் ஜுவல்லரியில் தீபாவளி அதிரடி சலுகைகள்!

Nov 3, 2026 - 14:25
 0  1
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! தனிஷ்க் ஜுவல்லரியில் தீபாவளி அதிரடி சலுகைகள்!
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! தனிஷ்க் ஜுவல்லரியில் தீபாவளி அதிரடி சலுகைகள்!

தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், தனிஷ்க் ஜுவெல்லரியில் அதிரடி தங்கப் பரிமாற்றச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தனிஷ்க், பழைய தங்க நகைகளைப் புதிய நகைகளாக மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, 20 சதவீதம் வரை செய்கூலி தள்ளுபடி மற்றும் கிராமுக்கு 301 ரூபாய் தள்ளுபடி உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும்போது, அதன் மதிப்புடன் கூடுதலாக ஒரு காரட் மதிப்பைப் பெறும் சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

உதாரணமாக, 20 காரட் மதிப்புடைய பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும்போது, 21 காரட் மதிப்பிற்கான பலனைப் பெறலாம்.

தனிஷ்க் நிறுவனத்தில் மட்டுமின்றி, பிற நகைக்கடைகளில் வாங்கிய பழைய தங்க நகைகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் பரிமாற்றம் செய்யலாம். வாங்கியதற்கான ரசீது இல்லாத பழைய நகைகள் மற்றும் உடைந்த தங்க நகைகளையும் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், பழைய தங்கத்தை எடைபோடுவது, அதன் தூய்மையைச் சோதிப்பது, உருக்குவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், தங்கத்தின் தூய்மை நவீன காரட்மீட்டர் கருவி மூலம் பரிசோதிக்கப்படுவதுடன், வெளிப்படையான பரிமாற்ற நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

தங்க நகைகள், தென்னிந்திய குந்தன், குந்தன் போல்கி, வண்ணக் கற்கள் பதித்த நகைகள் மற்றும் இயற்கை வைர நகைகள் எனப் பல்வேறு அழகிய வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

திருமணம், பிறந்தநாள், திருமண நாள் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு புதிய நகைகளை வாங்க விரும்புவோருக்கு இந்தச் சலுகை சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

இந்தச் சிறப்புத் தங்கப் பரிமாற்றச் சலுகை வரும் நவம்பர் 8ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

இந்தச் சலுகை குறித்து கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தனிஷ்க் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார வணிக மேலாளர் சந்திரசேகர், கோவைப் பகுதி வணிக மேலாளர்கள் நவீன், சிவரஞ்சனி மற்றும் பிரான்சைசி பார்ட்னர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, சலுகையின் சிறப்பம்சங்கள் மற்றும் பரிமாற்ற நடைமுறைகள் குறித்து விளக்கினர்.

இந்த தீபாவளிக்கு பழைய தங்கத்தைப் புதிய டிசைன் நகைகளாக மாற்ற, தனிஷ்க் ஜுவெல்லரியின் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0