இனி பொறியியல் கல்வியிலும் AI அதிரடி! 750 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி!
கோவை தொழில்நுட்பக் கல்லூரியில், ‘CRANE’ என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை மாற்ற அதிகாரியும், கல்லூரியின் முன்னாள் மாணவியுமான சுகன்யா, இந்த மையத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் CIT கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் சந்தோஷ், அஷ்வின் பாரத், ராஜேஷ் ராஜகோபாலன், அய்யப்பன் புருஷோத்தமன், அலமேலு மற்றும் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மையத்தின் மூலம் சுமார் 750 மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக நவீன AI ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது.
கணினி அறிவியல் மட்டுமின்றி, இயந்திரவியல், சிவில், மின்னியல் உள்ளிட்ட அனைத்துப் பொறியியல் துறைகளிலும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத் தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் CIT கல்லூரியின் இந்த முயற்சி, கோவை கல்வித்துறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0