அமைச்சர் விக்னேஷ் திறந்து வைத்த ‘பி.ஏ. கார்ஸ்’!
கோவை உக்கடம் நியூ மார்க்கெட் வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பி.ஏ. கார்ஸ் கார் அலங்காரப் பொருட்கள் விற்பனை மையத்தை, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் திறந்து வைத்தார்.
கோவையின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் உக்கடம் நியூ மார்க்கெட்டில், கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பராமரிப்புப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பி.ஏ. கார்ஸ் விற்பனை மையத்தில், சீட் கவர்கள், ஃப்ளோர் மேட்கள், ஸ்டீயரிங் கவர்கள், பாடி ஸ்டிக்கர்கள், மியூசிக் சிஸ்டம்கள், ஸ்பீக்கர்கள், லைட்டிங் பொருட்கள், மொபைல் ஹோல்டர்கள், சார்ஜர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுவதாக அதன் உரிமையாளர் சுஹைல் தெரிவித்தார்.
இந்தத் திறப்பு விழாவில் இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர், தமுமுக கோவை மாவட்டத் தலைவர் பஷீர் அகமது, எஸ்.டி.பி.ஐ. கோவை மாவட்டத் தலைவர் இஷாக் அகமது, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் அப்துல் கபூர், சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு செயலாளர் பைசல், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்டத் தலைவர் காஜா உசேன், 86-வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் உள்ளிட்ட அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உக்கடம் நியூ மார்க்கெட் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0