ரத்தினம் கல்வி குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி துவக்கம்!
கோவை ஈச்சனாரி இரத்தினம் கல்விக்குழுமத்தில் புதிய சட்டப்பள்ளி தொடக்க விழா நடைபெற்றது. தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சட்டக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.
இரத்தினம் குழுமத் தலைவர் மற்றும் இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் மதன் ஆ. செந்தில் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் என்.வி. நாகசுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். பாஸ்கர், முன்னாள் பதிவாளர் ஜே.வி. ராஜ், கே.எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ச. கிருஷ்ணராஜ் வரவேற்றார். துணைத்தலைவர் முனைவர் ஆர். மாணிக்கம், இயக்குநர் க்ஷிமா செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில், சட்ட நிறுவனங்கள் மற்றும் மலேசியாவின் பிரிக்ஃபீல்ட்ஸ் ஆசியா கல்லூரி, HELP பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, சட்டம் தொடர்பான குழு விவாதம் மற்றும் மாதிரி நீதிமன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0