துடியலூர்-மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிகள்!பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

Oct 29, 2026 - 13:45
 0  3
துடியலூர்-மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிகள்!பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட துடியலூர் – மருதமலை வரையிலான மாநில நெடுஞ் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்தும் சாலைகள் செப்பணிப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனை நேரில் ஆய்வு செய்த கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் விரைந்து சாலை பணிகளை முடித்துக் கொடுக்குமாறு நெடுஞ்சாலைத் துறையினரை வலியுறுத்தினார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட துடியலூர் – மருதமலை வரையிலான மாநில நெடுஞ் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலைகள் செப்பணிப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக பாதாள சாக்கடைக்காக துடியலூர் – மருதலை சாலையில் தோண்டப்பட்ட குழிகளில் மழை நீர் தேங்கி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதையடுத்து கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துடியலூர் முதல் அப்பநாயக்கன்பாளையம் வரையிலான பாதாள சாக்கடை பணி முடிவுற்ற நிலையிலும் செப்பனிடப்படாமல் உள்ள சாலையினை பார்வையிட்டார்.

தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விரைந்து சாலை செப்பணிடும் பணிகளை முடித்துக் கொடுக்குமாறு வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது தி.மு.க கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநக்ராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் இராஜசேகரன், துடியலூர் மேற்கு பகுதி தி.மு.க செயலாளர் இராஜசேகரன், வட்டக் கழக செயலாளர் சம்பத்குமார், தி.மு.க நிர்வாகிகள் பிரபாகரன், இராக்கிமுத்து, வெங்கடேஷ், சன்சோமு, தமிழ் நிதி, ஜெயக்குமார், தமிழ்நிதி, சாம்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0