சாதனைப் பயணத்தில் SKTH! பெண்களுக்கு 95% வேலைவாய்ப்பு…!
கோவையில், ஸ்ரீ கன்னிகா டிரேடிங் ஹவுஸ் நிறுவனத்தின் முதல் விநியோகஸ்தர்கள் சந்திப்பு, “த்ரீ டு இன்ஃபினிட்டி – 2026” என்ற பெயரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!
தமிழகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், சுகுணா குழும இயக்குநர் சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிறுவனத்தின் தலைவர் கே. நடராஜன், அவரது மனைவி சங்கரி நடராஜன், நிர்வாக இயக்குநர் விஜய் சிவராம் மற்றும் அவரது மனைவி ஹர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், டிஷ்யூ பேப்பர், மெழுகுவர்த்திகள், டிராலிகள் மற்றும் பைகள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த சிறந்த விநியோகஸ்தர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, டிஷ்யூ பேப்பர் மற்றும் மெழுகுவர்த்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று தயாரிப்புகளுடன் தொடங்கிய நிறுவனம், இன்று பல்வேறு தயாரிப்புப் பிரிவுகளுக்கு விரிவடைந்துள்ளது.
விநியோகஸ்தர்களின் நம்பிக்கை… புதிய தயாரிப்புகளின் அறிமுகம்… முடிவில்லா வளர்ச்சியை நோக்கிய பயணம் இதுவே ஸ்ரீ கன்னிகா டிரேடிங் ஹவுஸ் நிறுவனத்தின் “த்ரீ டு இன்ஃபினிட்டி – 2026” சந்திப்பின் சிறப்பம்சமாகும்!
What's Your Reaction?
Like
4
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
1