கோவைக்கு பெறுமை தேடிதந்த மாணவ மாணவியர்கள்.!
கோவை மாவட்டம் கேரள மாநிலம் மூணாறில், நடைபெற்ற 30வது தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில், கலந்து கொண்டு சிலம்பம், கராத்தே, உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று 11 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை பெற்று கோவைக்கு பெருமை தேடி தந்த மாணவியர்களுக்கு ஊர் மக்கள் அளித்த வரவேற்பு!!!
கோவை கண்ணம்பாளையம் மற்றும் நடுப்பாளையம் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி, ஆதி தமிழன் சிலம்பாட்ட கலைக்கூடம், எனும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமை பயிற்சியாளராக சென்சாய் நாக சுந்தரம், மாணவ மாணவியர்களுக்கு கராத்தே, சிலம்பம், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றார். இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பெற்று வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்களின் திறனை அறியும் வகையில், இந்தியாவின் எந்த பகுதியில், இத்தகைய தகுதி தேர்வு போட்டிகள் நடைபெற்றாலும் மாணவர்களை தயார் படுத்தி அவர்களை, அந்த போட்டிகளில் பங்கேற்க வைத்து பரிசுகளையும் பெற ஊக்கப்படுத்தி வருகின்றார். இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் மூணாறு பகுதியில்
ஸ்கூல் கேம்ஸ் அன்ட் அக்டிவிட்டி டெவலப்மென்ட் பவுன்டேஷன் சார்பாக, கடந்த 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, 30வது தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலம்பம், கராத்தே, பாக்சிங், ஆர்ச்சரி, அத்லெட்டிக் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1500 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர், 5 வயதில் இருந்து, 18 வயது மற்றும் அதற்க்கு மேல் உள்ளவர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 15 பேர் பங்கேற்றனர். அதில் மொத்தமாக, 11 தங்க பதக்கங்களும், 4 வெள்ளி பதக்கங்களும், சான்றிதழ்களும், கோப்பைகளும் பெற்று சாதனை படைத்தனர். இத்தகைய சாதனை படைத்த மாணவர்கள் சாலை மார்க்கமாக நேற்று இரவு கோவை வந்தடைந்தனர் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்தும், சால்வைகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும், மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் மக்கள் என பலரும் சேர்ந்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இம்மையத்தில் பயிற்சி பெறும் மாணவர் கதிர்வேலின் தந்தை கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
மாணவ மாணவியர்களின் தனித்திறன்களை மேம்படுத்த, எங்களது குழந்தைகளுக்கு கராத்தே, சிலம்பம், பாக்சிங், யோகா, உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றோம். மாணவர்கள் இத்தகைய பயிற்சிகளை செய்து வருவதால், அவர்களின் கவனம் முழுவதும் இந்த விளையாட்டை சுற்றியே இருந்து வருகிறது. மொபைல் போன், டிவி, இன்டர்நெட் உள்ளிட்டவைகளை பயண்படுத்துவதை குறைத்து கொள்கிறார்கள். இதனால் இவர்கள் பள்ளி பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். இத்தகைய பயிற்சிகளை கற்று கொள்ள மாணவர்கள் பயிலும் பள்ளியான, பீடம்பள்ளியில் உள்ள, ஸ்ரீ சுகபிரம்ப மஹரிஷி வித்யா மந்தீர் இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர் பள்ளி நாட்களில் போட்டிகளில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதி அளித்து, பாடத்திட்டங்களையும் கற்க வைக்கின்றனர். எனவே இந்த வெற்றி என்பது குழந்தைகளை சுற்றி உள்ள அனைவரின் கூட்டு முயற்சி அதற்க்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
2