நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு!

Oct 27, 2026 - 09:48
 0  1
நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு!
நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு!

கோவை மின்சார மூன்று சக்கர வாகன விற்பனையை விரிவுபடுத்தும் வகையில், நவ்ரங் நிறுவனத்தின் புதிய விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் சாலை பகுதியில் திறக்கப்பட்டது.

வட இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஜனாஷா குழுமத்தின் நவ்ரங் நிறுவனம், தனது விற்பனைச் சந்தையை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் புதிய விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஜனாஷா குழும நிறுவனங்களின் தலைவர் அபிஷேக் பாண்டே மற்றும் குழும இயக்குநர் டாக்டர் பி. நந்தகுமார் ஆகியோர் புதிய மையத்தைத் திறந்து வைத்தனர். 

விழாவில் ஜனாஷா குழும நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி என். கண்ண பிரான், நவ்ரங் மின்சார வாகன நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் வி. ரித்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, நவ்ரங் மின்சார வாகனங்களின் சிறப்பம்சங்கள் குறித்து நிறுவனத்தினர் கூறுகையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும், குறைந்த செலவில் நம்பகமான போக்குவரத்து வசதியை வழங்கும் வகையிலும் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் நவீன மின்கலத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் இவ்வாகனங்கள், பயணிகளை ஏற்றிச் செல்வது, சரக்குப் போக்குவரத்து, பொருட்களை விநியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு வணிகப் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக உள்ளன. மேலும், குறிப்பிட்ட வணிகத் தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவமைப்பிலும் வாகனங்களைத் தயாரித்து வழங்குவதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

புதிய விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ளதன் மூலம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான விற்பனை மற்றும் சேவை வாய்ப்புகள் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0