துபாயில் சர்வதேச கராத்தே சிலம்பம் போட்டிகள்!கோவை JKTC மாணவர்கள் 9 பதக்கங்கள் வென்று சாதனை!

Oct 29, 2026 - 23:37
 0  1
துபாயில் சர்வதேச கராத்தே சிலம்பம் போட்டிகள்!கோவை JKTC மாணவர்கள் 9 பதக்கங்கள் வென்று சாதனை!
துபாயில் சர்வதேச கராத்தே சிலம்பம் போட்டிகள்!கோவை JKTC மாணவர்கள் 9 பதக்கங்கள் வென்று சாதனை!

கோவை துபாயில் நடைபெற்ற இந்தியா – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகளில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த JKTC அகாடமி மாணவர்கள் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

அக்டோபர் 25-ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில், அகாடமி தலைவர் ஷிஹான் சிரில் வினோத் தலைமையில் பங்கேற்ற மாணவர்கள், 9 தங்கம், 8 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைக் கைப்பற்றினர்.

கராத்தே கட்டா மற்றும் சண்டைப் பிரிவுகளில் சுவஸ்திக், ஸ்ரீசரா, இனியா, ஆராதனா, ஜோஷிஹா ஸ்ரீ, ஜெஸ்லி, ஜசீனா தஸ்னீம், மன்ஹா ஷிரீன், ராம் ஈஸ்வர், பிரத்யுமன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் பதக்கங்களை வென்றனர். சிலம்பம் ஒற்றைக் கம்புப் பிரிவில் தேவி பாரதி முதலிடம் பிடித்தார்.

சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று கோவை மாவட்டத்திற்கும், தங்கள் பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பெற்றோர்களும், சக மாணவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0