மூட்டுவாத விழிப்புணர்வு நடை பேரணி

Oct 29, 2026 - 23:26
 0  2
மூட்டுவாத விழிப்புணர்வு நடை பேரணி
மூட்டுவாத விழிப்புணர்வு நடை பேரணி

கோவை உலக மூட்டுவாத தினத்தை முன்னிட்டு, ரேஸ்கோர்ஸ் பகுதியில் விஜிஎம் மருத்துவமனையின் விஜிஎம் ஆர்த்தோ கேர் சார்பில் ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ விழிப்புணர்வு நடைப்பேரணி நடைபெற்றது

டாக்டர் சுமன் சிபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., பங்கேற்று விழிப்புணர்வு உறுதிமொழியை வழிநடத்தினார். ஆறு கல்லூரிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

விஜிஎம் குழுமத் தலைவர் டாக்டர் விஜிஎம், டாக்டர்கள் மதுரா பிரசாத் சுமன், வம்சி மூர்த்தி கே., மித்ரா பிரசாத், கோகுல்க்ருபா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் மூட்டுகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 100 பேரிடம் மூட்டுவாதம் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0