கார் வாங்க இதுதான் சரியான வாய்ப்பு! இலவச முதல் சர்வீஸ்!₹1,000 FASTag ரீசார்ஜ்!கார்ஸ் 327 அதிரடி சலுகைகள்!
கோவை கார்ஸ் 327 நிறுவனம் சார்பில் 3-வது மெகா யூஸ்டு கார் மேளா நவம்பர் 20 முதல் 29-ம் தேதி வரை கோவை அவிநாசி சாலை தொட்டிபாளையம் பிரிவில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நிறுவனத் தலைவர் விஷ்ணு வேணுகோபால் கூறுகையில், தமிழகத்தில் முதல் முறையாக 1,000-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. குறைந்த விலை முதல் உயர்ரக கார்கள் வரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
கார் வாங்குபவர்களுக்கு முதல் சர்வீஸ் இலவசம், ரூ.1,000 மதிப்பிலான ஃபாஸ்டேக் ரீசார்ஜ் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும், 20-க்கும் மேற்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார் சர்வீஸ், பெயிண்டிங், ஆக்சஸரீஸ், உதிரிபாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் வசதிகளும் கிடைக்கும். தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த மேளா, செல் பெட்ரோல் பங்கிற்கு எதிர்புறம் நடைபெறுகிறது எனவே இந்த வாய்ப்பை கார் பிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0