தேசிய கார் பந்தயம்!துருவ் கோஸ்வாமி இரட்டை வெற்றி! பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் அசத்தல்!
கோவை காரி மோட்டார் ஸ்பீட்வே மைதானத்தில் நடைபெற்ற சி.டி.ஆர் – ஜே.கே டயர் எப்.எம்.எஸ்.சி.ஐ இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026 தொடரின் 2-வது சுற்று, விறுவிறுப்பான போட்டிகள் மற்றும் கடைசி நேர முந்தல்களுடன் நிறைவடைந்தது.
எல்.ஜி.பி பார்முலா 4 பிரிவில் மெக்கோ ரேசிங் அணியின் துருவ் கோஸ்வாமி இரண்டு பந்தயங்களிலும் வெற்றி பெற்று இரட்டை சாதனை படைத்தார். முதல் பந்தயத்தில் ஆர்யா சிங்கை வெறும் 0.175 வினாடிகள் வித்தியாசத்தில் கடைசி சுற்றில் முந்தி வெற்றி பெற்றார். இரண்டாவது பந்தயத்தில் 5-வது இடத்திலிருந்து தொடங்கி முதலிடம் பிடித்து அசத்தினார். இரு பந்தயங்களிலும் ஆர்யா சிங் 2-வது இடத்தையும், ராகுல் ரங்கசாமி மற்றும் ஆதித்யா பட்நாயக் 3-வது இடங்களையும் பிடித்தனர்.
ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி கோப்பை அமெச்சூர் பிரிவில் கபீர் சஹோச் தொடர்ந்து 5-வது வெற்றியைப் பதிவு செய்தார். புரொபஷனல் பிரிவில் அனிஷ் ஷெட்டி முதலிடம் பிடித்தார். 2026 சீசனின் அமெச்சூர் பிரிவில் கபீர் சஹோச்சும், புரொபஷனல் பிரிவில் செந்தில் குமாரும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஜே.கே டயர் லெவிடாஸ் கோப்பை ஜென்டில்மேன் பிரிவில் பிரதீக் சோனாவனே முதலிடத்தையும், அஸ்வின் புகழகிரி, பாலாஜி ராஜு அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர். ரூக்கி பிரிவில் கவீன் ராஜபக்சே வெற்றி பெற்றார்.
சூப்பர் சலூன் பிரிவுகளில் இந்தியன் சூப்பர் டூரிங் கார்ஸ் பிரிவில் அர்ஜுன் நரேந்திரன் இரண்டு பந்தயங்களிலும் வெற்றி பெற்றார். இந்தியன் டூரிங் கார்ஸ் பிரிவில் முதல் பந்தயத்தில் அமன் நாக்தேவும், இரண்டாவது பந்தயத்தில் பாலபிரசாத் ஏ-வும் வெற்றி பெற்றனர். இந்தியன் ஜூனியர் டூரிங் கார்ஸ் பிரிவில் அனிருதா அரவிந்த், சக அணி வீரர் தீபக் ரவிகுமாரை 0.307 வினாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடம் பிடித்தார். சூப்பர் ஸ்டாக் பிரிவில் தில்ஜித் டி.எஸ் வெற்றி பெற்றார்.
எப்1300 நோவிஸ் கோப்பையில் மெக்கோ ரேசிங் வீரர் ஷத்வீர் ஷெட்டி, கடைசி நேரத்தில் முன்னிலை பெற்று 3.863 வினாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அகஸ்டின் பாபி 2-வது இடத்தையும், கெக் கியான் ஜுன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்த சாம்பியன்ஷிப் தொடரின் 3-வது சுற்று டிசம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கோவை காரி மோட்டார் ஸ்பீட்வே மைதானத்தில் நடைபெற உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0