அழகிய ரவுண்டானா!உயிர்காக்கும் விழிப்புணர்வு! அடிசியா டெவலப்பர்ஸ் புதிய முயற்சி!

Nov 18, 2026 - 23:53
 0  2
அழகிய ரவுண்டானா!உயிர்காக்கும் விழிப்புணர்வு! அடிசியா டெவலப்பர்ஸ் புதிய முயற்சி!
அழகிய ரவுண்டானா!உயிர்காக்கும் விழிப்புணர்வு! அடிசியா டெவலப்பர்ஸ் புதிய முயற்சி!
அழகிய ரவுண்டானா!உயிர்காக்கும் விழிப்புணர்வு! அடிசியா டெவலப்பர்ஸ் புதிய முயற்சி!

கோவை மாநகரின் அழகை மேம்படுத்தும் வகையில், அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் முன்னெடுப்பில் ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா புதுப்பிக்கப்பட்டு, ‘காட்ஸ் கார்டன்’ என்ற பெயரில் அழகிய நகர்ப்புற அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் . பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.எஸ். மகேஸ்வரன், வடக்கு துணை ஆணையர் பி. தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.வி. மணிகண்டன் முன்னெடுப்பில், பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசங்கள் வழங்கும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் பொதுமக்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினர்.

இதுகுறித்து பேசிய எம்.வி. மணிகண்டன், கோவையில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு ரவுண்டானா மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகே பெண்கள் மேம்பாட்டு ரவுண்டானா ஆகியவற்றை உருவாக்கியுள்ளதாகவும், தற்போது மூன்றாவது அடையாளச் சின்னமாக ‘காட்ஸ் கார்டன்’ அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வாரந்தோறும் ஒரு துறையைச் சேர்ந்த 100 பேருக்கு இலவச தலைக்கவசங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் விழிப்புணர்வை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் கூறினார்.

நகரின் அழகை மேம்படுத்துவதோடு, சாலைப் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தும் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0