34 புதிய வாகனங்கள் களத்தில்!ஹெல்மெட் விழிப்புணர்வில் காவல்துறை அதிரடி!

Nov 14, 2026 - 18:24
 0  16
34 புதிய வாகனங்கள் களத்தில்!ஹெல்மெட் விழிப்புணர்வில் காவல்துறை அதிரடி!
34 புதிய வாகனங்கள் களத்தில்!ஹெல்மெட் விழிப்புணர்வில் காவல்துறை அதிரடி!
34 புதிய வாகனங்கள் களத்தில்!ஹெல்மெட் விழிப்புணர்வில் காவல்துறை அதிரடி!

கோவை, நவ.14: கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவசர காலங்களில் விரைவான உதவிகளை வழங்கவும் 34 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான வாகனங்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கும் விழா மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் G. கிரியப்பனவர், IAS., மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (IGP) மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) R.V. ரம்யா பாரதி, IPS., கோவை மாநகராட்சி ஆணையர்  கட்டா ரவி தேஜா, IAS., ஹோண்டா இந்தியா அறக்கட்டளையின் இயக்க அலுவலர் ராஜீவ் தனேஜா ஆகியோர் கலந்து கொண்டு 34 புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அவசர உதவிகள் தேவைப்படும் நேரங்களில் காவல்துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கூடுதல் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும், சாலைப் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் P. தங்கதுரை, IPS., (வடக்கு), S.S. மகேஸ்வரன், IPS., (போக்குவரத்து), G. கார்த்திகேயன் (தெற்கு), ராஜ். கண்ணா (ஆயுதப்படை) உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக, விபத்துகளைக் குறைத்து, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சூழலை உருவாக்குவது வலியுறுத்தப்பட்டது.

ஒன்றிணைந்து விபத்தில்லா கோவையை உருவாக்குவோம்; கோவையில் பூஜ்ஜிய விபத்துகள் என்ற இலக்கை நோக்கிப் பயணிப்போம்" என்ற உறுதிமொழியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

கோவை மாநகரில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும், அவசர காலங்களில் விரைவான காவல்துறை சேவையை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0