அக்னஸ் பள்ளியில் சிரில் வினோத்தின் மாயாஜாலம்! தமிழகத்தின் தலைசிறந்த மாயவித்தைக்காரர் விருது வழங்கி கௌரவிப்பு!
கோவை புளியகுளம் அக்னஸ் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தாளாளரும், முதல்வருமான சுரேஷ் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில், ஜே.கே.டி.சி. அகாடமி தலைவர் சிரில் வினோத் பங்கேற்று பிரம்மாண்டமான மேஜிக் ஷோ நடத்தினார். இதில் பல்வேறு வித்தியாசமான மாயாஜால நிகழ்ச்சிகளை நிகழ்த்தி, குழந்தைகளை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார். அவரது மேஜிக் நிகழ்ச்சிகளை குழந்தைகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சிரில் வினோத்தின் மாயாஜாலக் கலையைப் பாராட்டி, அவருக்கு 'தமிழகத்தின் தலைசிறந்த மாயவித்தைக்காரர் விருது – 2026' வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில், அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மைய நிறுவனத் தலைவரும், சி.எம்.எஸ். சமூக நல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மேலும், ஸ்ரீ விநாயகா மெடிக்கல் உரிமையாளர் ரவிச்சந்திரன், சாஸ்திரி தேசிய சேவா சங்கத் தலைவர் அம்சவேணி மனோகரன், பள்ளியின் அறங்காவலர் ஸ்டீபன் ஐயா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளரும், முதல்வருமான சுரேஷ் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0