வீடு கட்டப் போறீங்களா? நவீன கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில்!
கோவையில் கட்டுமானத் துறையின் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில், அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் BUILD EXCON 2.0 கண்காட்சி கொடிசியா வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.
இதன் தொடக்க விழாவில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார், பேராசிரியர் முனைவர் பொறியாளர் எல்.எஸ். ஜெயகோபால், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம். சுகுமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், கட்டுமானத் துறையைச் சார்ந்த 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.
குறிப்பாக, நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்கள், இறக்குமதி செய்யப்பட்ட கிரானைட் மற்றும் மார்பிள் கற்கள், நவீன மின்சாதனங்கள், இயற்கை கட்டுமானப் பொருட்கள், நவீன பயோ செப்டிக் டேங்குகள், பழுதடையாத நவீன நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டிகள், புதுமையான லிப்ட் வகைகள், புதிய வடிவிலான தரைத்தள டைல்ஸ் மற்றும் வீட்டு உள்அலங்காரப் பொருட்கள் என ஏராளமான புதிய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கட்டுமானத் துறையில் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களையும், புதிய தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.
இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை காட்சியா தலைவர் இராமலிங்கம், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கவிராஜ் மற்றும் பில்ட் எக்ஸ்கான் கண்காட்சித் தலைவர் தங்கவேல், செயலாளர் திருமூர்த்தி, பொருளாளர் சேனாதிபதி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் டேனியல், குமாரவேல், நிர்வாக அலுவலர் பிரவீன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.
மேலும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0