சொகுசு கார் முதல் பட்ஜெட் கார் வரை! 6 நாட்கள் மெகா கார் மேளா!
கோவை கார் டீலர்கள் சங்கத்தினர் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா, கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (நவம்பர் 19) தொடங்கியது.
இந்த மேளாவை நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கார் டீலர்கள் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் துரை, கோவை ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இந்த மேளாவில், 1,000-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய ரக கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்து வாங்கும் வசதியுடன், பழைய கார்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு, வாகன ஆவணச் சரிபார்ப்பு மற்றும் வங்கிக் கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன.
குறைந்த விலையில் தரமான கார்களை வாங்க விரும்புவோர் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு:
98422 20021, 98422 57147, 98422 45759.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0