12 விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை! மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அதிரடி!
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில், ஆறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் விழா நடைபெற்றது.
நவம்பர் 13-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இதில், Ailaysa & Mullai Academia International, Intopz, Selsoft Inc., Taras Systems and Solutions, Thozhil – Global Internship Platform மற்றும் Village Technology School ஆகிய ஆறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கூட்டு செயல்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கான கூடுதல் வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான SAKSHAM கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், ஒற்றைப் பெற்றோர் பிரிவு, கல்வித் தகுதி மற்றும் கிராமப்புறப் பிரிவு என மூன்று பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
அதேபோல், பள்ளிப் பருவத்திலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த 12 மாணவர்களுக்கு விளையாட்டு உதவித்தொகைகளும் வழங்கப்பட்டன.
கல்வி, தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்துத் துறைகளிலும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதுடன், தொழில்துறைக்குத் தேவையான திறன் வாய்ந்த இளம் தலைமுறையை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, மாணவர்களின் எதிர்காலத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0