கார்கள் முதல் கனரக வாகனங்கள் வரை!ஒரே இடத்தில் பிரம்மாண்ட ஆட்டோ எக்ஸ்போ!

Nov 14, 2026 - 16:46
 0  41
கார்கள் முதல் கனரக வாகனங்கள் வரை!ஒரே இடத்தில் பிரம்மாண்ட ஆட்டோ எக்ஸ்போ!

கோவை, நவ.14: தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன் சார்பில், ஆறாவது கோவை ஆட்டோ ஷோ கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கியது. நவம்பர் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். ஜி.ஆர்.ஜி. கல்வி குழுமங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவுக்கு தி கோயமுத்தூர் மோட்டார் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோசியேஷன் தலைவர் மதிபாலன் மற்றும் கோவை ஆட்டோ ஷோ தலைவர் சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்தக் கண்காட்சியில் அசோக் லேலண்ட், பென்ஸ், டொயோட்டா, வால்வோ, ஸ்கோடா, ஹூண்டாய், எம்.ஜி. மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இருசக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள், மின்சார வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், நவீன பேட்டரிகள், ஆயில் தயாரிப்புகள் மற்றும் வாகனங்களை அழகுபடுத்தும் நவீன தொழில்நுட்பங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அரங்குகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்றுள்ளதால், வாகனத் துறையின் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை ஒரே இடத்தில் பார்வையிடும் வாய்ப்பு பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினருக்கு கிடைத்துள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1