கார் பிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! இலவச முதல் சர்வீஸ்!₹1,000 FASTag ரீசார்ஜ்!

Nov 20, 2026 - 19:35
 0  9
கார் பிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! இலவச முதல் சர்வீஸ்!₹1,000 FASTag ரீசார்ஜ்!
கார் பிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்! இலவச முதல் சர்வீஸ்!₹1,000 FASTag ரீசார்ஜ்!

கோவை பட்டணம் பகுதியில் செயல்பட்டு வரும் கார்ஸ் 327 நிறுவனம் சார்பில், 3-வது மெகா யூஸ்டு கார் மாநில மாநாடு, அவிநாசி சாலை தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்த மாநாட்டை மெகா வெல்டிங் ராட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.பி. அழகேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த விலை கார்கள் முதல் உயர்ரக கார்கள் வரை பல்வேறு மாடல்களில் வாடிக்கையாளர்கள் தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ற கார்களைத் தேர்வு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கார்ஸ் 327 நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் விஷ்ணு வேணுகோபால் கூறுகையில், இந்த மாநாடு இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றார்.

கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள், சர்வீஸ் சலுகைகள் வழங்கப்படுவதுடன், கார்ஸ் 327 நிறுவனத்தில் கார் வாங்குபவர்களுக்கு முதல் சர்வீஸ் இலவசமாகவும், ஆயிரம் ரூபாய்க்கான ஃபாஸ்டேக் ரீசார்ஜ் இலவசமாகவும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார் 20-க்கும் மேற்பட்ட வங்கி நிதி ஆலோசகர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வாகனக் கடன் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கார் விற்பனையுடன் மட்டுமின்றி, ஒர்க்ஷாப், பெயிண்டிங், கார் ஆக்சஸரீஸ், உதிரிபாகங்கள் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தங்களது நிறுவனத்தில் கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தனி பார்க்கிங், கழிவறை மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கோவையில் கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஒரே இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களைப் பார்வையிட்டு, ஒப்பிட்டு, தங்களுக்குப் பிடித்த காரைத் தேர்வு செய்யும் வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0