மதிப்பெண் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு வீட்டு மனை! கோவையில் சி.கே. கண்ணனின் கல்வி ஊக்க அறிவிப்பு!

Nov 17, 2026 - 17:13
 0  8
மதிப்பெண் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு வீட்டு மனை! கோவையில் சி.கே. கண்ணனின் கல்வி ஊக்க அறிவிப்பு!
மதிப்பெண் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு வீட்டு மனை! கோவையில் சி.கே. கண்ணனின் கல்வி ஊக்க அறிவிப்பு!

கோவை தமிழின் தொன்மையையும், தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரப் பெருமைகளையும் போற்றும் வகையில், தமிழ்நாடு நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

பேரூர் ஆதீனம் தமிழும் பண்பாட்டு மையம் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இவ்விழா, பேரூர் ஆதீனம் முத்தமிழ் அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது 

விழாவிற்கு தமிழும் கலை பண்பாட்டு மையத்தின் வே. சிவபாலன் வரவேற்புரை வழங்கினார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் இராமாநந்த குமரகுருபர அடிகளார் ஆகியோர் அருளாசி வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக வின்னர்ஸ் இந்தியா குழுமத்தின் தலைவர் சி.கே.கண்ணன், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தம், செ. துரைசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் உன்னத அறிவிப்பை வின்னர்ஸ் இந்தியா குழுமத்தின் தலைவர் சி.கே. கண்ணன் வெளியிட்டார்.

அதன்படி, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்கும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று வீட்டுமனைகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், கல்வியே மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தும் வலிமையான அடித்தளம் என வலியுறுத்திய அவர், கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் அளிப்பது சமூகத்தின் முக்கியக் கடமை என்றும் எடுத்துரைத்தார்.

தமிழின் பெருமையைப் போற்றியதோடு, மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்த இந்த அறிவிப்பு, விழாவில் பங்கேற்ற அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றது.

தமிழையும் பண்பாட்டையும் கொண்டாடும் விழா… கல்விச் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் மனிதநேய அறிவிப்பு… கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0