SBOA பள்ளியில் 42வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

Nov 14, 2026 - 17:43
 0  99
SBOA பள்ளியில் 42வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
SBOA பள்ளியில் 42வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
SBOA பள்ளியில் 42வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியின் 42-வது ஆண்டு விழா – ‘அன்னலட்சுமி சமர்ப்பணம்’ கோலாகலம்!

கோவை, நவ.15: சொக்கம்புதூரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 42-வது ஆண்டு விழா, ‘அன்னலட்சுமி சமர்ப்பணம்’ என்ற தலைப்பில் கோலாகலமாக நடைபெற்றது.

இயற்கை, வேளாண்மை, மண்ணின் மகத்துவம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பைப் போற்றும் வகையில் விழா அமைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 2026-ம் ஆண்டிற்கான சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விவசாயிகளின் அர்ப்பணிப்பும், உணவு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பும் எடுத்துரைக்கப்பட்டன.

சென்னை எஸ்.பி.ஓ.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் பி. நிதிஷ் ஆண்ட்ரேயா ராஜா சிங் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வி. கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தங்களது இலக்குகளை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் செயல்பட்டு வாழ்வில் உயர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எஸ்.பி.ஓ.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளையின் செயலாளரும் தாளாளருமான ஏ. செந்தில் ரமேஷ் தொடக்க உரையாற்றினார். இணைச் செயலாளர் சி. லாசர் ஜெயப்பிரகாஷ் சிறப்புரையாற்றினார். சாய் டென்டல் கேர் நிறுவனத்தின் உரிமையாளரும், பள்ளியின் முன்னாள் மாணவியுமான டாக்டர் ஆர்.எம்.எஸ். சௌந்தர்யா (பி.டி.எஸ்.) தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அறக்கட்டளையின் பொருளாளர் எஸ். பிரகாஷ், துணைப் பொருளாளர் எம். ஜீவன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டி.ஆர். விஜயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

விழாவில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி இசைக்குழுவினரின் அணிவகுப்பு மரியாதை பார்வையாளர்களைக் கவர்ந்தது. கல்வி மற்றும் இணைப்பாடச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும், இந்தியாவின் சாதனைப் பெண்கள் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற பெண் ஆளுமைகளின் சேவைகளை நினைவுகூரும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பள்ளியின் தலைமை ஆசிரியை மரியா கிறிஸ்டினா ஸ்டெல்லா சுனிதா எம். நன்றியுரை வழங்கினார். மண்ணையும், மகளிரையும், வேளாண்மையையும் போற்றும் வகையில் நடைபெற்ற இவ்விழா சிறப்பாக நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0