40 ஆசிரியர்களுக்கு தொழில்துறை நேரடி பயிற்சி! சிஐஐ உயர்கல்வி மாநாடு!

Nov 21, 2026 - 17:05
 0  12
40 ஆசிரியர்களுக்கு தொழில்துறை நேரடி பயிற்சி! சிஐஐ உயர்கல்வி மாநாடு!

கோவை அவிநாசி சாலையில் உள்ள மெர்லிஸ் ஹோட்டலில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) கோவை மண்டலம் சார்பில் 10-வது தேசிய உயர்கல்வி மாநாடு நடைபெற்றது. இதனை சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பராக் கல்கர் தொடங்கி வைத்தார். மாநாட்டுத் தலைவரும், ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் கே. செந்தில் கணேஷ் கருப்பொருள் உரையாற்றினார். சிஐஐ கோவை மண்டல துணைத்தலைவர் மகாலிங்கம் ராமசாமி வரவேற்றார்.

தொழில்துறை 5.0-க்கு ஏற்ப உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவு, பல்துறை கல்வி, செய்முறைப் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை கூட்டாண்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மேலும், சிஐஐ சார்பில் 10 தொழில் நிறுவனங்களில் 12 வாரங்கள் நேரடி பயிற்சி பெற்ற 40 ஆசிரியர்களுக்குப் பாராட்டு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரத்தினம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மதன் ஏ. செந்தில், டாக்டர் என்.ஆர். அலமேலு, முத்து சங்கர், ஜோஜோ கண்ணத், டாக்டர் சம்சுல் ஏக்ரம், கார்த்திகேயன் ஆர்., டாக்டர் வி. கோவைச்செல்வன், ரபீந்திர சாஹ், டாக்டர் குறிச்சி குமார், கௌஸ்துப் குல்கர்னி மற்றும் சுஜனா அபிராமி உள்ளிட்ட கல்வி மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0