துபாயில் பறந்தது கோவை கொடி! கராத்தே போட்டியில் கார்மல் கார்டன் மாணவர்கள் அசத்தல்!

Oct 31, 2026 - 12:56
 0  5
துபாயில் பறந்தது கோவை கொடி! கராத்தே போட்டியில் கார்மல் கார்டன் மாணவர்கள் அசத்தல்!
துபாயில் பறந்தது கோவை கொடி! கராத்தே போட்டியில் கார்மல் கார்டன் மாணவர்கள் அசத்தல்!
துபாயில் பறந்தது கோவை கொடி! கராத்தே போட்டியில் கார்மல் கார்டன் மாணவர்கள் அசத்தல்!

கோவை: துபாயில் நடைபெற்ற இந்தோ – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி – 2026-ல், கோவை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 3 பதக்கங்களை வென்று பள்ளிக்கும் கோவை மாவட்டத்திற்கும் சர்வதேச அளவில் பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி துபாயில் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற கார்மல் கார்டன் பள்ளி மாணவர்களான 3ஆம் வகுப்பு மாணவர் ராம் ஈஸ்வர் மற்றும் 7ஆம் வகுப்பு மாணவி ஜெஸ்லி ஆகியோர் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெற்றிப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.

இதில், 3ஆம் வகுப்பு மாணவர் ராம் ஈஸ்வர், கட்டா பிரிவில் இரண்டாம் பரிசு பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், சண்டைப் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றார். அதேபோல், 7ஆம் வகுப்பு மாணவி ஜெஸ்லி, கட்டா பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

இதன் மூலம் கார்மல் கார்டன் பள்ளி மாணவர்கள் 2 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை வென்று சர்வதேசப் போட்டியில் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.

மாணவர்களின் இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், பள்ளியின் தாளாளரும் முதல்வருமான அருட்தந்தை ஆரோக்கிய ததேயூஸ் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் வெற்றிக்குப் பின்னணியாக இருந்து சிறப்பான பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளர்கள் சிரில்வினோத், கோகுலகிருஷ்ணன், ஆனந்த் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டினர்.

சிறிய வயதிலேயே சர்வதேசப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள கார்மல் கார்டன் பள்ளி மாணவர்களின் இந்த வெற்றி, அவர்களது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் முறையான பயிற்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைந்துள்ளது. மாணவர்கள் மேலும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0