KPR கல்லூரியில் 12 உலக சாதனை முயற்சிகள்!
கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஏழு ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், “KPR CAS உலக சாதனைத் திருவிழா 2027” நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, “போதைக்கு வேண்டாம் சொல்வோம்; விளையாட்டுக்கு ஆம் சொல்வோம்!” என்ற விழிப்புணர்வுடன் 464 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
கேபிஆர் குழுமத் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி தலைமையில், கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் ஆலோசனையில், கல்லூரி முதல்வர் முனைவர் பி. கீதா வழிகாட்டுதலில் இவ்விழா நடைபெறுகிறது.
மொத்தம் 12 உலக சாதனை முயற்சிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. இவற்றுக்கு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் அங்கீகாரம் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
சாதனைச் சான்றிதழ்கள் வழங்கும் விழா 2027 ஜனவரி 9-ம் தேதி நடைபெறவுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0