மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

Oct 29, 2026 - 13:52
 0  1
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள்!

கோவை துடியலூரில் புதியதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் இதனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக மேயர் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் துடியலூர் பேருந்து நிலையத்தில் நீண்ட நாட்களாக கால்களில் புண் ஆகி புழுக்கள் மற்றும் ஈக்கள் நெலிய துர்நாற்றத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் அங்கேயே படுத்துக்கொண்டு அங்கிருந்தவர்கள் கொடுக்கம் உணவுகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருந்த முதியவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அந்த முதியவர் அவர்களுடன் வர மறுத்ததால் நீண்ட நேரம் போராடி அவரிடம் மருத்துவமனைக்குத்தான் கூட்டிப் போகிறோம், திரும்பவும் இங்கு கொண்டு வந்து விட்டுவிடுவோம் எனக்கூறி அவரை ஸ்டெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். 

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, இது போன்ற நபர்களை மீட்டு அரசு மருத்துவமனையிலோ அல்லது காப்பகங்களிலிலோ சேர்த்தால் அங்கிருந்து தப்பித்து மீண்டும் இங்கேயே வந்துவிடுகின்றனர். மேலும் இங்கு பொதுமக்களிடம் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் காசில் மது வாங்கி குடித்துவிட்டு பேருந்து நிலையத்திலேயே படுத்துக்கொள்கின்றனர் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0