கோவையில் சர்வதேச புகழ்பெற்ற ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ அறிமுகம்!

Nov 17, 2026 - 17:01
 0  3
கோவையில் சர்வதேச புகழ்பெற்ற ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ அறிமுகம்!
கோவையில் சர்வதேச புகழ்பெற்ற ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ அறிமுகம்!
கோவையில் சர்வதேச புகழ்பெற்ற ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ அறிமுகம்!

கோவை சாய்பாபா காலனியில் சர்வதேச புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ஜீன் லூயிஸ் டேவிட்’ அழகு நிலையத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது.

1961-ம் ஆண்டு பாரிஸில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல் கிளையாகவும், இந்தியாவின் இரண்டாவது கிளையாகவும் கோவையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக கார்த்திபுரம் நிர்வாக இயக்குநர் கே. நவீன், ஜீன் லூயிஸ் டேவிட் இந்திய மாஸ்டர் ஃபிரான்சைஸ் நிர்வாகிகள் சோனியா, நிதின், சி.எஸ்.ஆர். குழும நிர்வாக இயக்குநர் சி. மிதேஷ் ரெட்டி மற்றும் யூடியூபர் திருப்பூர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளையைத் திறந்து வைத்தனர்.

கிளையின் உரிமையாளர் சூர்யபிரகாஷ் கூறுகையில், சர்வதேச தரத்திலான நவீன அழகு மற்றும் சிகை அலங்காரச் சேவைகளை கோவை மக்களுக்கு வழங்குவதே நோக்கம் என்றார்.

நிறுவனத்தின் இந்தியாவிற்கான பிராண்ட் ஆலோசனை மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளை கங்கா தேவராஜன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். நிகழ்ச்சியில் நிறுவன நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0