மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வு!
கோவை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் கோவை மண்டலம் சார்பில், கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு நவம்பர் 11ம் முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைப்பெற்றது.
இந்தத் தேர்வில் மின்கம்பம் ஏறுதல், X-ARM பொருத்துதல் உள்ளிட்ட மின்வாரியப் பணிகளுக்குத் தேவையான உடல் திறன்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் பரிசோதிக்கப்பட உள்ளன.
முதற்கட்டத் தேர்வில் 9 மீட்டர் PSC மின்கம்பத்தில் ஏறுதல், 3 பேஸ் X-ARM பொருத்துதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளும் திறன் சோதிக்கப்பட்டது,
இரண்டாம் கட்டத்தில் மின்கம்பத்தில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களான Creeper Set மற்றும் Disc ஆகியவற்றைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளும் திறன் பரிசோதிக்கப்பட்டது,
மூன்றாம் கட்டமாக 3 பேஸ் V X-ARM தொடர்பான பணித்திறன் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை முடிக்கும் திறன் சோதிக்கப்பட்டது,
மேலும், தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் பாதுகாப்பு உபகரணங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், தேர்வு நடைமுறைகளின்
போது வழங்கப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள உதவியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் உடல் தகுதி, பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நடைமுறைப் பணித்திறனை உறுதி செய்யும் வகையில் இந்த மூன்று கட்டத் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 382 நபர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0