மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்!
கோவை மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் போதிய மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி, கிராம மக்கள் ஆண் தவளைக்கும் பெண் தவளைக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தாண்டு போதிய மழை பெய்யாததால், மழை வேண்டி நடைபெற்ற இந்த நிகழ்வில், ஊர் தலைவர் வீட்டிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி தொடங்கியது. ஆண் தவளைக்குத் தங்கச் சங்கிலியும், பெண் தவளைக்குத் தங்க நெக்லஸ் அணிவித்து மணக்கோலத்தில் அலங்கரித்தனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்டு மாட்டுவண்டியில் இரு தவளைகளையும் அமர வைத்து, மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பின்னர், மருத வீரர் விநாயகர் கோவிலில் வைத்து இரு தவளைகளுக்கும் திருமணம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கிராம மக்கள், தாங்கள் கொண்டு வந்த அரிசியை வழங்கி வழிபட்டனர். தொடர்ந்து, கிடா வெட்டி அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.
இயற்கையோடு இணைந்த கிராமிய மரபையும், மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாய மக்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும், மக்களின் வாழ்வில் வளம் பெருகவும் கிராம மக்கள் மனமுருகி வேண்டிக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அஜித் ரேவந்த் ராஜா ராகுல் நாகராஜ் பிரபு பிரனேஷ் பிரவீன் சரவணன் முத்து அருண்குமார் புவனேஷ் மோகன் பவன் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0