"வேசிக்கோ" "தீசுக்கோ"என பக்தி முழக்கம்
கோவை ராஜவீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு, பாரம்பரியமிக்க கத்தி போடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்தத் திருவிழாவில், பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் நடைபெற்ற விழாவில் கோவை பூ மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தி முழக்கங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்ட பக்தர்கள், ராஜவீதியில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி வந்தனர்.
அப்போது, “வேசுக்கோ… தீசுக்கோ…” என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டபடி, பாரம்பரிய வழக்கப்படி உடலில் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த நிகழ்வில் 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பக்தர்களின் பக்தி முழக்கங்களால் கோவில் வளாகமும், ராஜவீதி சுற்றுவட்டாரப் பகுதிகளும் விழாக்கோலம் பூண்டன.
விஜயதசமி நாளில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சௌடேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும், விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும், முன்னாள் காந்திபார்க் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவருமான து. பரமசிவம் கலந்து கொண்டார்.
மேலும், கோவில் தர்மகர்த்தாக்கள் பால்ராஜ், மோகன், கோவில் நிர்வாகத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் வினோத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் முக்கியப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர்.
பாரம்பரியம், பக்தி, நேர்த்திக்கடன் என மூன்றும் சங்கமித்த இந்த விஜயதசமி விழா, கோவை ராஜவீதியில் பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0