டெங்குவை விரட்ட களமிறங்கிய சத்தியமங்கலம் நகராட்சி, தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆணையர்!

Sep 20, 2026 - 12:50
 0  125

ஈரோடு /சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் நகரைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் டெங்கு ஒழிப்புப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசு உற்பத்தியைத் தடுப்பது, சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

நகராட்சி ஆணையர் வெங்கடேஷ்வரன் அதிகாலையில் நேரில் சென்று தூய்மைப் பணியாளர்களின் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு, பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தார்.

சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமசந்திரன் தலைமையில், நகரின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நகரின் தூய்மையைப் பாதுகாப்பதிலும், டெங்கு பாதிப்புகளைத் தடுப்பதிலும் களத்தில் அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சேவை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0