6 மாதம் எம்.எல்.ஏ.வுடன் பயணம்… அரசு நிர்வாகத்தை நேரில் கற்கும் இளைஞர்கள்!

Oct 15, 2026 - 15:45
 0  3
6 மாதம் எம்.எல்.ஏ.வுடன் பயணம்… அரசு நிர்வாகத்தை நேரில் கற்கும் இளைஞர்கள்!
6 மாதம் எம்.எல்.ஏ.வுடன் பயணம்… அரசு நிர்வாகத்தை நேரில் கற்கும் இளைஞர்கள்!

கோவை இளைஞர்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், மக்கள் பிரதிநிதிகளின் பணிகளையும் நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் முன்னெடுத்துள்ள KGF (Kavundampalayam Governance Fellowship) என்ற ஆறு மாத காலப் பயிற்சித் திட்டம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

முன்னதாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள், ஆறு மாதங்கள் டாக்டர் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.வுடன் இணைந்து பயணித்து, தொகுதி மக்களின் கோரிக்கைகள், அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் மக்கள் பிரதிநிதியின் பங்கு ஆகியவற்றை நேரடி அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ள உள்ளனர்.

இளைஞர்களிடையே சமூகப் பொறுப்புணர்வு, அரசு நிர்வாகம் குறித்த புரிதல் மற்றும் மக்கள் சேவையில் ஈடுபடும் ஆர்வத்தை வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து டாக்டர் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. பேசுகையில், அப்துல் கலாம் பிறந்தநாளில் சமூக அக்கறையும் பல்வேறு கனவுகளும் கொண்ட இளைஞர்களுடன் இணைந்து பயணிப்பதில் மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார். இந்த ஆறு மாதப் பயிற்சி, அரசு நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், சமூக வளர்ச்சியில் இளைஞர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும் என்றும், இளைஞர்களின் புதிய சிந்தனைகளைக் கற்றுக்கொள்ளத் தாமும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0