மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்!
கோவை காந்திபுரம் செம்மொழிப் பூங்காவில், கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கே.எம்.சி.எச். மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் அருண் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்டோபர் மாதம் ‘பிங்க் மாதமாக’ கடைப்பிடிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கே.எம்.சி.எச். மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் மையத்தில் ஆலோசனை, பரிசோதனை, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவச் சேவைகளும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஒரே இடத்தில் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சரஸ்வதி கையெழுத்திட்டு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வே தடுப்பின் முதல் படி! மார்பகத்தில் கட்டி, அசாதாரண மாற்றங்கள் அல்லது பிற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதும், மருத்துவ ஆலோசனையின்படி உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியம் என்பதை இந்நிகழ்ச்சி வலியுறுத்தியது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0