வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு! 5 செடிகள் பறிமுதல்!

Oct 18, 2026 - 10:34
 0  0
வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு! 5 செடிகள் பறிமுதல்!

கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சை கவுண்டன்புதூர் பகுதியில் வீட்டின் அருகே உள்ள காலி நிலத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், போலீசார் சோதனை மேற்கொண்டு 5 கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, நஞ்சை கவுண்டன்புதூர், பரமசிவன் கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் சந்த் ஜெய்ஸ்வாலின் மகன் ஆஷிஷ் ஐஸ்வான் (24) என்ற ஆயுஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

காந்திபுரத்தில் உள்ள பேரிங் விற்பனைக் கடையில் பணிபுரிந்து வரும் இவர், தனது தாயுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவரது உறவினருக்குச் சொந்தமான சுமார் 5 சென்ட் காலி நிலத்தில் உள்ள பழைய வீட்டின் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, துடியலூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தி, 5 கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்..

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0