பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் திடீர் பரபரப்பு.!
கோவை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் வீடு கோரி மனு அளிக்க முயன்ற போது தடுத்து நிறுத்திய காவல் துறையினர் : முதல்வர் விஜய்யின் வருகையின் போது நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம்!
காந்திபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து இலவச வீடு கோரி மனு அளிக்க முயன்ற திருப்பூரைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், அப்பகுதியில் தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். தனக்கு உரிய இட வசதியும், சொந்த வீடும் வழங்க வேண்டும் என்று கோரி பல்வேறு கட்டங்களில் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை வருகை தந்து உள்ள தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்துத் தனது கோரிக்கை மனுவை வழங்க வேண்டும் என அவர் தீவிரமாக விரும்பி உள்ளார். ஆனால், பாதுகாப்புக் காரணமாக அப்பகுதியில் காவல்துறை கெடுபிடிகள் அதிகமாக இருந்ததால், உள்ளே செல்ல அனுமதி அடையாள அட்டை இல்லாததால் அவரை அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை
முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த சக்திவேல், பெரியார் அறிவுலகம் செல்லும் பாதையின் நடுவே தரையில் அமர்ந்தும் படுத்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் வழி நடுவில் படுத்துத் தனது கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அவரை சமாதானம் செய்து உள்ளே செல்ல அனுமதி வழக்கினர். சிறிது தூரம் சென்றதும் மீட்டும் ஒரு சோதனையின் போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினர் அங்கு இருந்த சேரில் அமர வைத்து சமாதானப்படுத்திய பின்னர் பெரியார் அறிவுலகம் முன்புறம் பொதுமக்கள் நின்று கொண்டு உள்ளனர். அங்கு சென்று நின்றால் உங்கள் மனுவை அவர் வாங்கி கொள்வார் என கூறி அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0