ஸ்ரீ சாய்பாபாவின் 108 வது மகா சமாதி விழா!

Oct 21, 2026 - 17:33
 0  1
ஸ்ரீ சாய்பாபாவின் 108 வது மகா சமாதி விழா!
ஸ்ரீ சாய்பாபாவின் 108 வது மகா சமாதி விழா!
ஸ்ரீ சாய்பாபாவின் 108 வது மகா சமாதி விழா!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாகசாயி மந்திரில், ஸ்ரீ சாய்பாபாவின் 108-வது ஆண்டு மகா சமாதி விழா, 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது

கடந்த 11-ம் தேதி தொடங்கிய இவ்விழாவில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் மற்றும் பல்வேறு ஆன்மிக வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்றன.

விழாவின் நிறைவு நாளில் மகா சமாதி தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காலை முதலே காகட ஆரத்தி, மகா ஹோமம், அபிஷேகம், பூர்ணாஹுதி, மகா அபிஷேகம் மற்றும் உச்சிக்கால ஆரத்தி ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கும் நடைபெற்றது

 இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், ஸ்ரீ சாய்பாபாவிற்கு மகா அலங்காரம் செய்யப்பட்டு, பரதநாட்டியம், தூப ஆரத்தி மற்றும் ஸ்ரீ சாயி சஹஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ சாய்பாபாவின் அருளைப் பெற்றனர்.

விழாவிற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளையின் தலைவர் எஸ் பாலசுப்ரமணியன்,துணைத்தலைவர் சர்வோத்தமன்,செயலாளர் பாலசுப்பிரமணியன்,பொருளாளர் சுகுமார்,அறங்காவலர்கள் தியாகராஜன், சந்திரசேகர், அமர்நாத் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0