காந்தி ஜெயந்தி சைக்கிள் விழிப்புணர்வுபேரணி 2026

Oct 4, 2026 - 00:53
 0  3
காந்தி ஜெயந்தி சைக்கிள் விழிப்புணர்வுபேரணி 2026

கோவை 157-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒற்றுமை, சுதந்திர உணர்வு, ஒழுக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 157 சைக்கிளிஸ்டுகள் பிரமாண்ட பேரணி நாட்டின் சுதந்திரத்துக்காக அகிம்சை வழியில் போராடிய மகாத்மாக காந்தடிகள் 157 வது பிறந்தநாளில், "காந்தி ஜெயந்தி சைக்கிள் விழிப்புணர்வு 2026" நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த சைக்கிள் பேரணியில் 6 வயது முதல் 75 வரையில் 157 சைக்கிளிஸ்டுகள் பங்கேற்றனர். இதில் கோவை மாநகர காவல் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். நவஇந்திய பகுதியில் உள்ள ஸ்டோர்ஸ் ஹைவ் பகுதியில் தொடங்கிய சைக்கிள் பேரணி, அவிநாசி சாலையில் சிட்ரா, நீலம்பூர் வழியாக கருமத்தம்பட்டி வரை சென்று மீண்டும் அதே வழியாக நவ இண்டியா ஸ்போர்ஸ் ஹைவ் பகுதிக்கு வந்தடைந்தனர். 2 மணி நேரம் நடந்த பிரமாண்ட சைக்கிள் பேரணியில் 50 கி.மீ. தூரம் பயணித்தனர். 

இதுதொடர்பாக பேசிய சமூக ஆர்வலரும், சைக்கிளிஸ்டுமான ஜி.டி. விஷ்ணுராம், 'நாட்டின் ஒற்றுமை, சுதந்திர உணர்வு, ஒழுக்கம், போதைப்பொருள் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இந்த சைக்கிள் பேரவையை நடத்தினோம். வளமான தேசத்திற்கு அடிப்படை தன்னலமற்ற தேசப்பற்று. நாட்டின் ஒற்றுமை, ஒழுக்கம் போன்றவை இந்த தலைமுறை கடைபிடிக்க வேண்டியது அவசியமானதாக இருக்கின்றன. நாட்டின் வருங்கால தலைமுறையை காக்க போதையில்லா தேசத்தை கட்டமைக்க வேண்டியதும் அவசியமாக இருக்கின்றன. இது போன்ற அனைத்து சமூக சார்ந்த விழிப்புணர்வுக்கும், விளையாட்டு தரும் நம்பிக்கையும் ஒழுக்கமும் நம்மை வளப்படுத்தும் விதத்தில் அமையும் என்பதே அடிப்படை. அந்த நம்பிக்கையிலேயே, இந்த பிரமாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் உணர்வை நாம் போற்றி, இந்த தேசத்தை உலகின் வளமான தேசமாக மிளிர அனைவரும் ஒன்றிணை வேண்டும்" என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0