பெட்டிக்கடைகளில் கைவரிசை!4பேர் அதிரடி கைது!

Oct 19, 2026 - 16:38
 0  2
பெட்டிக்கடைகளில் கைவரிசை!4பேர் அதிரடி கைது!
பெட்டிக்கடைகளில் கைவரிசை!4பேர் அதிரடி கைது!
பெட்டிக்கடைகளில் கைவரிசை!4பேர் அதிரடி கைது!
பெட்டிக்கடைகளில் கைவரிசை!4பேர் அதிரடி கைது!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளின் பூட்டை நள்ளிரவில் உடைத்து, சிகரெட் பண்டல்களைத் தொடர்ந்து திருடிச் சென்ற கொள்ளையர்களின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 இந்நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு அந்த 4 திருடர்களையும் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

​கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மளிகை மற்றும் பெட்டிக் கடைகளைக் குறி வைத்துத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. கடைகளின் பூட்டுகளை லாவகமாக உடைத்து, அங்கு விற்கப்படும் சிகரெட் பண்டல்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் அள்ளிச் செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதற்கு இடையே, திருட்டுச் சம்பவங்கள் பதிவான சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளியான சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர், அப்பகுதியில் முடங்கிப்போன திருட்டு வழக்குகளுக்குத் தீர்வு காணத் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர்.

விசாரணையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ​முகைசீன், உக்கடம் கோட்டைமேடு சேர்ந்தஅய்ஸ்முகமது, கரும்புக்கடையைச் சேர்ந்த ​ஜசீல், ​சகாபுதீன்

​ஆகிய நான்கு பேர் கிணத்துக்கடவு மற்றும் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்துத் திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் உறுதியானது.

இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களில் மூன்று பேரை அன்னூர் காவல்துறையினரும், மற்றொரு நபரை கிணத்துக்கடவு காவல்துறையினரும் தனித்தனியே கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பிற விபரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

இரவு நேரங்களில் கடைப் பூட்டை உடைத்து வந்த இந்தச் கும்பல் காவல் துறையினரிடம் சிக்கி உள்ளதால், கிணத்துக்கடவு பகுதி மளிகை மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகள் தற்போது பெரும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0