100-க்கும் மேற்பட்ட அங்காடிகள்! இந்துஸ்தான் கல்லூரியில் பிரம்மாண்ட ‘ராயல் எக்ஸ்போ 2026’!
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் BBA – CA மற்றும் BBA Logistics துறைகள் சார்பில், ‘ராயல் எக்ஸ்போ 2026’ பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கொடிசியா நிர்வாகக் குழு உறுப்பினரும், அமிர்தலட்சுமி CNC Components நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கே.தினேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், இந்துஸ்தான் கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன், துணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஏ.சண்பகவல்லி, இந்துஸ்தான் சர்வதேசப் பள்ளி மையத் தலைவர் சுஜா டி.நாயர் மற்றும் துறைத் தலைவி ஆர்.சபிதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
ராயல் எக்ஸ்போவில், BBA – CA மற்றும் BBA Logistics துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்ட அங்காடிகளை அமைத்து, தங்களது மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், கோவையைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு, தங்களது மேலாண்மை திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்றனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் துறைத் தலைவி ஆர். சபிதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த ராயல் எக்ஸ்போ 2026, மாணவர்களின் தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை திறன்களை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0