மழைநீருடன் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு! அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு!
கோவையில் , பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர் இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சம்பத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவானந்தா காலனி, ரத்தினபுரி 32-வது வார்டுக்கு உட்பட்ட சங்கனூர் மற்றும் கண்ணப்ப நகர் பகுதிகளில் சங்கனூர் ஓடை அமைந்து உள்ளது. ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அடைப்பு காரணமாக, அதன் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீருடன் சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்களின் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்ததோடு, கடுமையான துர்நாற்றமும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது.
கன மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதைக் அறிந்த அமைச்சர் சம்பத், உடனடியாகத் தொடர்புடைய பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்:
கண்ணப்ப நகர் நாராயணசாமி லே-அவுட் பகுதியில் மழைநீரும் சாக்கடை நீரும் புகுந்த விடுகளை நேரில் பார்வையிட்ட அவர், தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்றவும், ஓடைகளைத் தூர்வாரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கவுண்டம்பாளையம் அருகே உள்ள மணிகாரம்பாளையம் பகுதியில் கார் மீது மரம் முறிந்து விழுந்த இடத்திற்கு நேரில் சென்று நிலவரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாய்பாபா காலனியில் 44 வது வார்டிலும், நல்லாம்பாளையம் பகுதி
வார்டு 28 மற்றும் சாய்பாபா காலனியில் 44 வது வார்டு
ஆகிய பல்வேறு வார்டுகளில் தொடர் மழையால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை அமைச்சர் ஆய்வு செய்து, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டு உள்ளார்.
மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தத் தற்காலிக மற்றும் நிரந்தரத் தீர்வுகளை உடனே காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0