இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58.வது மாநாடு

Oct 10, 2026 - 10:26
 0  3
இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58.வது மாநாடு
இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58.வது மாநாடு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது ஆண்டு மாநாடு நடைபெற்று வருகிறது. அக்டோபர் 8-ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, 10-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது.

விழாவுக்கு அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம் தலைமை உரையாற்றினார். 

பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வி. பாரதி ஹரிசங்கர் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர் டாக்டர் சரத் கோபாலன், சங்கத்தின் செயலாளர் டாக்டர் சுப்பாராவ் ஜி., பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் ஹை. இந்து ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.

மாநாட்டின் சிறப்பு அம்சமாக, NITI ஆயோக் கௌரவ உறுப்பினர் டாக்டர் ஆ. ஸ்ரீனிவாஸ், அனைவருக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். 

ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான அரசின் நடவடிக்கைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பான கருத்துகள் மாநாட்டில் இடம்பெற்றன.

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. ராஜேஸ்வரி, மனையியல் புல முதன்மையர் பேராசிரியர் சில்வியா சுபப்பிரியா உள்ளிட்ட கல்வியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்துத் துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினருக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான ஊட்டச்சத்து கிடைப்பதன் முக்கியத்துவம், ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது குறித்து இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வுகள், அரசின் திட்டங்கள் மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்துக்கு இந்த மாநாடு முக்கிய தளமாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0